மத்திய இணையமைச்சர் பதவி பதவி தனக்கு வேண்டாம் என்று சுரேஷ் கோபி கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்க்கு மறுப்பு தெரிவிதுள்ளார் .
நாடு முழுவதும் 18 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது.இதனையடுத்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தபட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சியின் கூட்டணி 293 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மேலும் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க பாஜக முடிவு செய்தது.இதையடுத்து குடியரசுத் தலைவர் திரௌவதி முர்முவை சந்தித்த பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மேலும் புதிய அரசு அமையும் வரை காபாந்து பிரதமராக செயல்படும்படி பிரதமர் மோடியை குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, ஜூன் 09 3வது முறையாக பிரதமராக நரேந்திர மோடிபதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் , நேற்று ( ஜூன் 09) டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் இணை அமைச்சர்கள் -36 , கேபினட் அமைச்சர்கள் -30 , தனி பொறுப்பு -5 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அந்த வகையில்,கேரள மாநிலம் திருச்சூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட சுரேஷ் கோபி, 4.12 லட்சம் வாக்குகள் பெற்று, 74 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.மேலும் கேரள மாநிலத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே ஒரு பாஜக எம்பி சுரேஷ் கோபி ஆவார். முதல்முறையாக கேரளாவில் பாஜக ஒரு தொகுதியை கைபற்றியுள்ளதால் அவருக்கு அமைச்சர் பதவியை பாஜக தலைமை கொடுத்தது.
மேலும் பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி,” திரை துறையில் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருப்பதாலும்,நடிக்கவிருப்பதாலும் , இந்த சூழலில் மத்திய இணை அமைச்சர் பதவி வேண்டாம் எனக் கூறினேன்; பாஜக தலைமை கேட்டுக்கொண்டதால் மறுக்கவில்லை;
மத்திய இணை அமைச்சர் பதவியில் இருந்து என்னை விடுவிப்பார்கள் என நம்புகிறேன்,எம்பியாக இருந்து திருச்சூர் மக்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வேன் என்று தெரிவித்தாக செய்திகளில் தகவல் வெளியானது.சுரேஷ் கோபி இந்த பேச்சு பாஜவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,” மத்திய இணையமைச்சர் பதவி தனக்கு வேண்டாம் என்று சுரேஷ் கோபி கூறியதாக செய்திகள் வெளியான நிலையில் இதற்க்கு மறுப்பு தெரிவிதுள்ளார் .
மேலும் இணையமைச்சர் பதவியில் இருந்து நான் விலகப் போவதாக வெளியான தகவல் தவறானது. தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சிக்கு பாடுபட உறுதியாக உள்ளேன் என்று பாஜக எம்.பி சுரேஷ் கோபி தெரிவிதுள்ளார்.