நீட் தேர்வு விவகாரத்தில் விவாதம் நடத்தி மாணவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்தது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரிக்கை மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி ஈடுபட்டனர்.
இளங்கலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிவு முறைகேடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று மக்களவையில்காங்கிரஸ் எம்பி- கே.சி.வேணுகோபால், ஒத்திவைப்பு தீர்மானத்தை சமர்ப்பித்தார்.
அதன்படி, நீட் முறைகேடு தொடர்பாக உடனடியாக விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
ஆனால், சபாநாயகர் ஓம்பிர்லா, கேள்வி நேரம், ஒத்தி வைப்பு தீர்மானம், கவன ஈர்ப்பு தீர்மானம் போன்றவற்றுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை.
இதையும் படிங்க: ‘பீஹாரை போல் தமிழகத்திலும் சாராயமில்லாத அரசு செயல்படணும்’- எச்.ராஜா அட்டாக்!
மேலும் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் துவங்க உள்ளது எனத் தெரிவித்தார்.
இதனால் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக நண்பகல் 12 மணி வரை அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இந்த நிலையில், நீட் தேர்வு விவகாரத்தில் விவாதம் நடத்தி மாணவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் , நீட் தேர்வு மற்றும் நடைமுறையில் உள்ள தாள் கசிவு விவகாரம் தொடர்பாக இந்திய எதிர்க்கட்சிகள் அரசுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த விரும்புகிறது.
இன்று பாராளுமன்றத்தில் அவ்வாறு செய்ய அனுமதிக்கப்படாதது துரதிர்ஷ்டவசமானது. இது இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒரு தீவிர கவலை.
இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தி மாணவர்களுக்கு உரிய மரியாதையை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் வலியுறுத்துகிறோம். என்று குறிப்பிட்டுள்ளார்.