கங்கனா ரனாவத் கன்னத்தில் பெண் காவலர் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள மண்டி என்ற தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிட்டார்.
இந்த நிலையில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நாட்களில் எம்பி ஆக பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில் இன்று கங்கனா ரனாவத் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்த போது அங்கு காவலில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் ஒருவர் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக தொழிற்பாதுகாப்பு படை பெண் காவலரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், குல்விந்தர் கவுர் என்பது தெரிய வந்தது. அவரது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை கங்கனா ரனாவத் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது போராட்டம் செய்த விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கூறியதால் அவரை கன்னத்தில் அறைந்ததாக முதல் கட்ட விசாரணையில் பெண் காவலர் கூறியதாக தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த பெண் காவலர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.