அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் முத்துமலை முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் அமைந்துள்ளது முத்து மலை முருகன் கோவிலில். இக்கோவிலில் உலகிலேயே மிக உயரமான 146 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைந்துள்ளது.
சுமார் 3 கோடி ரூபாய் செலவில், 146 அடி உயரத்தில், வசீகரிக்கும் சிரித்த முகத்துடன், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் முருகன். சிலையின் அருகிலேயே ஒரு லிஃப்ட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் , இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் வாழப்பாடி அடுத்துள்ள ஏத்தாப்பூர், முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது..!!
146 அடி உயரம் கொண்ட முருகன் சிலையின் திருவடியில் மலர் தூவி வணங்கிய அவர் முருகன் வேலை தாங்கி மூலவரை சுற்றி வந்து சிறப்பு வழிபாடு நடத்தினார்.
மேலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து முருகனின் இடுப்பு பகுதியில் அமைந்துள்ள தியான பீடத்தில் 15 நிமிடங்கள் ஆழ்ந்த தியானம் மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.