பாஜக தலைவர் அண்ணாமலை மீது திமுக தலைவர் டி ஆர் பாலு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த மாதம் 14ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்,கனிமொழி உள்ளிட்ட திமுக மூத்த அமைச்சர்களின் சொத்து பட்டியலை அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தவறான புள்ளி விபரங்களுடன் சொத்து பட்டியலை வெளியிட்டதாக முதல்வர் மு க ஸ்டாலின், ஆர் எஸ் பாரதி, டி ஆர் பாலு, உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அண்ணாமலைக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்பி இருந்தன.மேலும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கெடு விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அண்ணாமலை மன்னிப்பு கேட்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், எந்த நடவடிக்கை என்றாலும் சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடர்ந்த அவதூறு வழக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர முதன்மை குற்றப் பிரிவு நீதிமன்றத்தின் அரசு வழக்கறிஞர் தேவராஜ் இந்த வழக்கைச் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ளார்.
இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையை இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது முதலமைச்சரைத் தொடர்பு திமுக தொடர்ந்து உள்ளார்.
பின்னர் ,அறிக்கை அனுப்பியும் அண்ணாமலை மன்னிப்பு கேட்காததாலும் அடிப்படை ஆதாரம் இன்றி அவதூறு கருத்துக்களைத் தெரிவித்ததாக அண்ணாமலை மீது திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி ஆர் பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 17வது நீதித்துறை நடுவர் அனிதா ஆனந்த்திடம் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.