ராகுல் காந்தி 50 வயது முதியவர் ஆனால் அவரது மூளை ஐந்து வயதுக் குழந்தை போல் செயல்படுகிறது என மத்தியப் பிரதேசம் முதலமைச்சர் பாஜக தலைவருமான சிவராஜ் சவுக்கன் சவுத்ரி தெரிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பொதுத்தேர்தல் வரும் மே பத்தாம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சியினரும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சவுக்கன் சவுகான் ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் பிரச்சாரத்தில் பேசிய அவர், மக்களவை எம்பி பகுதியிலிருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்குப் பிரதமர் மோடி தான் காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக சிவராஜ் சிங் சவுக்கன் 50 வயது முதியவர் ஆன ராகுல் காந்தியின் மூளையின் வயது 5 தான் என்றும் நீதிமன்றம் தான் அவருக்குத் தண்டனை வழங்கியது.
ஆனால் அவர் பிரதமர் மோடியைக் குற்றம் சாட்டுகிறார். மேலும் ராகுல் காந்திக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை என்று கூறினார். அது மட்டும் அல்லாமல் தேர்தல் நேரங்களில் வாக்குரிதிகளை தருவதில் தகுதியானவரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் மத்திய பிரதேச முதலமைச்சர் பேசிய இந்த பேச்சு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.