மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி சண்முகநாதன் மறைவுக்கு, சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
தினத்தந்தி நாளிதழில் 70 ஆண்டுகள் தன்னை இதழியல் பணியில் இணைத்துக் கொண்ட மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி சண்முகநாதன்.
அவர், 2021-ஆம் ஆண்டுக்கான கலைஞர் எழுதுகோல் விருது பெற்றவராவார்.
பெரியவர் ஐ. சண்முகநாதன் இன்று (03-05-2024) வயது மூப்பின் காரணமாக காலமானார்.
அவரது மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தினத்தந்தி குழுமம் வெளியிட்டு, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையான “வரலாற்றுச் சுவடுகள்” நூலின் ஆசிரியர் சண்முகநாதன்.
“ஒரு தமிழன் பார்வையில் 20ம் நூற்றாண்டு வரலாறு”, “கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம்” வரை முதலான பல்வேறு நூல்களையும் அவர் படைத்துள்ளார்.
சண்முகநாதன் அவர்களது மறைவு தமிழ் இதழியல் உலகுக்குப் பெரும் இழப்பாகும்.அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள் அனைவருடனும் துயரத்தில் பங்கேற்கிறோம்.
இவ்வாறு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் அதன் இணைச் செயலாளர் பாரதி தமிழன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐ.சண்முகநாதன் மறைந்தாரே! – வைரமுத்து இரங்கல்!