மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு 1000 நூல்களை நடிகர் விஜய் சேதுபதி அன்பளிப்பாக வழங்கினார்.
மதுரை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகளின் நலன் கருதியும் அவர்களது வாசிப்பு திறனை அதிகப்படுத்தும் நோக்கிலும் மதுரை மத்திய சிறையில் செயல்பட்டு வரும் சிறை நூலகத்திற்கு ஒரு லட்சம் புத்தகங்களை திரட்டும் முயற்சியில் சிறை நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில்,மதுரை மத்திய சிறை கைதிகளுக்காக நவீன நூலகம் அமைக்கப்படவுள்ளது. இந்த நூலகத்திற்காக சுமார் 1 லட்சம் புத்தகங்கள் சேகரிக்கும் நோக்கில், தனிநபர்கள், அமைப்புகள் மூலமாக நன்கொடையாக புத்தகங்கள் பெறப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேலான புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த வகையில் இன்று இந்திய திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி ஆயிரம் புத்தகங்களை அன்பளிப்பாக சிறைத்துறை அதிகாரிகளிடம் இன்று
வழங்கினார்.