தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தேர்வுகளை ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 13ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு ஏப்ரல் 3ம் தேதி தேர்வு முடிவடைகிறது.மேலும் நேற்று பிளஸ் 1 மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு தொடங்கியது. ஏப்ரல் 5ம் தேதி தேர்வு முடிவடைகிறது.
இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 6ம் தேதி தேர்வு தொடங்கி 20 தேதி முடிவடைய உள்ளது.இந்த நிலையில் ஏப்ரல் 24 தேதி முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடத்த திட்டமிடபட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டு தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான தகவல் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவுவதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய வைரஸ் பரவல் காரணமாக புதுச்சேரியில் நாளை முதல் 26ம் தேதி வரை 10 நாட்களுக்கு 1-8ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.