தமிழ் நாட்டில் அரியலூர் மொத்தம் 632 ஏரிகளை கொண்ட மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான விளங்குகிறது. மருதையாறும் கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், அரியலூர் மாவட்டத்தில் தான் பாய்கின்றன. ஆனாலும் இன்னும் வறண்ட பூமியாகத் தான் அரியலூர் மாவட்டம் உள்ளது.
அங்கு மிகக்குறைந்த அளவில் தான் பாசன வசதி பெற்ற நிலங்கள் உள்ளன. கி.பி. 9-ம் நூற்றாண்டில் தொடங்கி 11-ம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்க வைக்கக்கூடியவை.
சோழர் கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகு சிறப்பாக வளரும்.
அதனால்தான், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் 29 மற்றும் 30-ம் தேதிகளில் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், நடைபயணம் தொடர்பாக பொன்னி நதி பூமியை பொன் விளையும் பூமியாக மாற்றுவோம்.
அக்காலத்தில் பாசனக் கட்டமைப்புகளுக்கு சோழர் கால பாசனக் அமைப்புகளை மீட்டெடுப்போம். நமது முயற்சி அரியலூர்-சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தச் செய்வதற்கான அதற்காக வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.