ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்த நிலையில்மதுரையில் ஆர் எஸ் எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் இன்று 47 இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்பில் பேரணி மற்றும் பொதுகூட்டம் நடைபெறுகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை வண்டியூரில் உள்ள பெருமாள் கோவிலில் இருந்து சுமார் 2.5 கி.மீ தூரத்தில் உள்ள அம்பிகா திரையரங்கம் (அண்ணாநகர்) வரையில் பேரணி நடைபெறுகிறது.
இந்தப் பேரணியில் 500க்கும் அதிகமான ஆர்எஸ்எஸ் அமைப்பினர் கலந்து கொள்ளகின்றனர். அதனைத் தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.ஆர் எஸ் எஸ் அமைப்பின் பேரணியை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பிரார்த்தனை பாடல் பாடப்பட்டது.அதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொடியேற்றப்பட்டு பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து ஊர்வலத்தை ராயபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீதர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.