சென்னை கலாஷேத்ரா மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை கோரி சக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணைய தலைவர் நேரில் விசாரணை நடத்திய நிலையில் மாணவிகள் ஆவேசம் அடைந்து நீதி வேண்டும் என முழக்கமிட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பல நாட்களாக ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.