ஆறு பேரைத் திருமணம் செய்து பணம், நகைகளைத் திருடிக் கொண்டு மாயமான பெண், திருச்செங்கோடு அருகே 7ஆவதாக ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக காத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையத்தை சேர்ந்தவர் தனபால் (வயது 35). இவருக்கும், மதுரையை சேர்ந்த சந்தியா (26) என்பவருக்கும் அதே ஊரை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் மூலம் திருமணம் நடைபெற்றது.
மேலும், திருமணத்திற்குப் பிறகு முதலிரவு முடிந்ததுமே தப்பிச்செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால், கிளம்பி விட வேண்டுமென்றும், ஒருவேளை மாப்பிள்ளையை அறையில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்ப முடியாத சூழல் ஏற்பட்டால், பாலில் தூக்க மாத்திரை கொடுத்து விட்டு, பொருட்களை வாரி சுருட்டிக்கொண்டு கிளம்ப வேண்டும் என்றும், இதுவரை ஏமாந்த மாப்பிள்ளை வீட்டார், அவமானங்களுக்குப் பயந்து, பெரும்பாலும் புகார் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும், தன்னை போல, மேலும் 4 பெண்களும் இவர்களிடம் சிக்கி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
மோசடி திருமணத்துக்குச் சம்மதிக்காவிட்டால், என்னுடைய நிர்வாண படத்தை வெளியிடுவேன் என்றும் குழந்தைகளைக் கொன்று விடுவேன் என்றும் மிரட்டியதால்தான் தான் இந்த திருமணங்களுக்குச் சம்மதித்ததாகவும், தன்னை போல, மேலும் 4 பெண்களும் இவர்களிடம் சிக்கி உள்ளதாகவும் இதில் எவ்வளவு பணம் கிடைத்தாலும், அந்த பணம் முழுவதையும், அவர்களே எடுத்துக்கொள்வார்கள் என்றும் எங்களுக்குக் கொஞ்சம் பணம் மட்டுமே தருவார்கள் என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ,எல்லோரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்பதால், காவல்துறைவரை விவகாரம் செல்லாததை தரகர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாமக்கல், கரூர், திருப்பூர், காங்கேயம் பகுதிகளில் திருமண மோசடிகளைச் செய்துள்ளதாகவும், திருமணம் என்ற போர்வையில் எனக்குப் பல திருமணங்களைச் செய்து வைத்து போலீசில் வசமாகச் சிக்க வைத்து விட்டார்கள்” என்றும் கண்ணீருடன் சந்தியா கூறியுள்ளார்.