பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ரூ 41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது. புதுடெல்லி, பாரத் ஜோடா யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி ரூ 41 ஆயிரம் மதிப்புள்ள டிஷர்ட் அணிந்து இருப்பதாக பாஜக விமர்சித்துள்ளது.
பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ளது. முதல் புகைப்படத்தில் ராகுல் காந்தியின் புகைப்படம். மற்றொன்று அவர் அணிந்திருந்ததுபோன்ற ஒரு டி-ஷர்ட்டின் விலையை குறிக்கும் படம். அந்த படத்தில் பர்பரி டி-ஷர்ட்டின் விலை ரூ.41.257 என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதோடு பாரதம் பார்க்கட்டும் என்ற வார்த்தையையும் பாஜக பதிவிட்டுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், பிரதமர் மோடி ரூ 10 லட்சம் மதிப்புள்ள கோர்ட் அணிந்து இருந்ததாக விமர்சித்துள்ளது. மேலும், பாரத் ஜோடா யாத்திரையில் திரளும் கூட்டத்தை பார்த்து பயந்து வீட்டீர்களா? பிரச்சினைகளை பற்றி பேசுங்கள்.. வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் குறித்து பேசுங்கள்.
ஆடைகள் குறித்து நாம் விவாதிக்க வேண்டும் என்றால், பிரதமர் மோடி 10 கோடி மதிப்புள்ள சூட் மற்றும் 1.5 லட்சம் பதிப்புள்ள கண்ணாடி அணிந்து இருந்தது பற்றியும் பேசப்படும்” என்று காங்கிரஸ் பதிலடி கொடுத்தது.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ராகுல் காந்தியின் டீ- சர்ட் குறித்த தகவல்களைதெரிவித்துள்ளார்.
திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்டைத்தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார். நடைபயணத்திற்காக 20 ஆயிரம் டீ – சர்ட்களை அடித்தோம். இதில் தொண்டர்கள் பயன்படுத்தும் டீ- சர்ட்டில் தலைவர்களின் படங்கள் போடப்பட்டுள்ளது. ராகுலுக்காக 4 டீ-சர்ட்கள் படங்கள் இல்லாமல் அடிக்கப்பட்டன.
அது 40 ஆயிரமும் இல்லை. 4 லட்சமும் இல்லை. மோடிதான் ரூ.10 லட்சத்தில் கோட் அணிந்து உள்ளார். ராகுலைச் சந்தித்தவர்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.மேலும் ஒற்றுமைக்காக பாடுபடும் தலைவர் ராகுலின் செயல்களை மக்களிடம் இருந்து திசை திருப்ப பாரதிய ஜனதா இது போன்ற செயல்களை செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.