அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ் பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தப்பட்டது .
மேலும் சென்னையில் 10 இடங்களிலும், கோயம்பத்தூரில் 9 இடங்களிலும், திருச்சி, செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய நகரங்களில் 7 இடங்களிலும் ஆகமொத்தம் 26 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரு முறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் , மூன்றாவது முறையாக இந்த சோதனையானது நடத்தப்பட்டது.
இதேபோல், முன்னாள் அமைச்சர், சி.விஜயபாஸ்கர் தொடர்பான 13 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ. 16.37 லட்சம் , 1,872 கிராம் தங்க நகைகளும், 8.28 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டன. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 120 ஆவணங்கள், 1 சிடி, 1 பென்டிரைவ், 2 – ஐ போன்கள் மற்றும் 4 வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள் இவ்வழக்கின் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், இது மாதிரியான சோதனை நடைப்பெறும் பொழுது அதனை எதிர்கொள்ளும் நல்ல மனவலிமையை புரட்சி தலைவி அம்மா அவர்கள் கற்றுக்கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறினார்.
தனிபட்ட நபரின் மீது கொண்ட காட்டத்தால் அரசியல் கால்புணர்ச்சியின் உட்சக்கட்ட பிரதிபலிப்பாக இந்த சோதனையை கருதுவதாகவும் பல்வேறு பணிகள் இருக்கக்கூடிய ஒரு அரசு மூன்று அறையையும் ஒரு ஹாலையும் சோதனை செய்ய இவ்வளவு அரசு இயந்திரங்களை பயன்படுத்துவது கவலையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.மேலும் எனது மகள் அடுத்து எப்போ வரப்போறீங்க சார் எனக் கேட்டார். அந்த அளவு அனைத்தயும் எதிர்க்கொள்ள தயாராக இருப்பாதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நண்பரான வேல்ஸ் கல்லூரி மருத்துவ கல்லூரி முதல்வர் வீடு மற்றும் வேல்ஸ் கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மருத்துவமனை, 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.