முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே கருத்து மோதல் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தமிழிசை சௌந்தரராஜனை வீட்டில் அண்ணாமலை நேரில் சென்று சந்தித்தார்.
முன்னாள் தமிழாக்க பாஜக தலைவருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் இடையே உக்கட்சி பூசல் நிலவி வருகிறது. பல பாஜக முக்கிய தலைவர்கள் தமிழிசை பின் நிற்பதாகவும், அதே நேரம் புதிய நிர்வாகிகள் பலர் அண்ணாமலை பக்கம் நிற்பதாகவும் தெரிகிறது.
இந்த பிளவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பெற்றிருக்கலாம் என பாஜக முக்கிய தலைவர்கள் கருதுகின்றனர்.
மேலும் அதிமுக பாஜக இடையே விரிசல் ஏற்பட்டு பிரிவதற்கு காரணம்அண்ணாமலை தான் என்ற ஒரு தகவலும் தலைவர்கள் மத்தியில் உலா வருகிறது.ஆனால் அண்ணாமலையோ அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக பிரிந்தது நல்லது தான் என்ற மனநிலையில் இருந்து வருகிறார்.
இந்த சூழலில் தான் அண்ணாமலைக்கும் தமிழிசைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே 2024-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தோல்விக்கு பிறகு தமிழிசை பேசுகையில்,
அதிமுக கூட்டணியில் இருந்திருந்தால் 25 முதல் 30 தொகுதிகளில் வென்று இருக்கலாம் என அண்ணாமலையை நேரடியாக தாக்கி பேசியிருந்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா கண்டித்தாரா? இதைத்தான் சொன்னார்.. தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம்!
மேலும் பாஜக ஐடி வின் நிர்வாகிகளை சிலர் தங்களது சொந்த கட்சி தலைவர்களையே கடுமையாக விமர்சிப்பதாகவும், இதையெல்லாம் இனி பொறுத்துக் கொள்ள முடியாது என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் தான், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நிகழ்ச்சியில், மேடையிலேயே மத்திய உள்துறை அமைச்சர் கைநீட்டி தமிழிசையை அழைத்து கண்டித்து பேசிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியது.
இதனை அடுத்து இந்த விவகாரம் குறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது மறுப்பு தெரிவித்து தமிழிசை கையசைத்தபடி சிரித்துக் கொண்டு சென்றார்.
மேலும்தனது டிவிட்டர் பக்கத்தில், நேற்று நான் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை சந்தித்தேன். 2024 தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில் ஜி, பிந்தைய வாக்கெடுப்பு மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி கேட்க என்னை அழைத்தார்.
அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை கூறியது உறுதியளிக்கிறது. இது அனைத்து தேவையற்ற யூகங்களையும் தெளிவுபடுத்துவதாகும். என்று பதிவிட்டு இருந்தார்.
ஆனால் இது பற்றிய சலசலப்பு முற்று பெறாத நிலையில், இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழிசையின் வீட்டிற்கே சென்று பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.
இதனையடுத்து,இன்றைய தினம், மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜக மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா தமிழிசைஅவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா தமிழிசை அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.