Kalyan Raman: மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக தமிழிசை மற்றும் வேலுமணி கூறிய கருத்துகள் சரியானதுதான். கட்சியின் வாக்கு சதவீதம் சரிந்தபோதும், கட்சியின் தேசிய தலைமையை அண்ணாமலை தவறாக வழிநடத்துவதாக பாஜக அறிவுசார் அணி நிர்வாகி கல்யாண் ராமன் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,” கட்சியின் பணத்தை கொண்டு அண்ணாமலையின் வார்ரூம் அவரை விளம்பரப்படுத்தவும், சொந்தக் கட்சித் தலைவர்களை வசைபாடவும் தான் செயல்படுகிறது.
இதையும் படிங்க: மூக்கு வியர்க்க பேசும் அண்ணாமலை.. அதிமுக I.T. Wing கொடுத்த தரமான பதிலடி !
கிருஷ்ணகுமார், அமர்பிரசாத் ரெட்டி போன்ற பலர் பாஜக கட்சிப் பணத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பளத்தை பெறுவது மட்டுமல்லாமல் அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியவர்கள், தங்கம் கடத்துபவர்கள், கோடிக்கணக்கில் மோசடி செய்பவர்களிடமிருந்து பணம் பறிப்பது போன்று மாஃபியாவாக செயல்படுகின்றனர்.