நாடு முழுவதும் மொழியையும் அதன் பயன்பாட்டையும் மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் செப்டம்பர் 14அன்று இந்தி திவாஸ் கொண்டாடப்படுகிறது.இந்தியாவில் இந்தி அதிகாரப்பூர்வ மொழியான ஹிந்தி பிஜி, நியூசிலாந்து, சிங்கப்பூர், மொரிஷியஸ் போன்ற நாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று இந்தி தினத்தை முன்னிட்டு, பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.
இந்த நிலையில் நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தை புரிந்து கொள்ள தேசிய மொழியான இந்தி மொழியை கற்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்ற அகில இந்திய அலுவல் மொழி மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.விழாவில் அமித் ஷா பேசிய அவர்,
“உள்ளூர் மொழிகளும் இந்தி மொழியும் நமது கலாச்சாரத்தின் உயிர்நாடி. நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், அலுவல் மொழியான ஹிந்தியைக் கற்க வேண்டும். இவற்றைப் புரிந்துகொள்ள உள்ளூர் மொழி வலுப்பெற வேண்டும் என்றார்.
மேலும் இந்தி மற்றும் உள்ளூர் மொழிகள் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட மொழிகளின் தாழ்வு மனப்பான்மையை அகற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது.இதனை தொடர்ந்து,பேசிய அவர் தேசிய கல்விக் கொள்கை 2020 ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்த நிலையில் தொடக்கக் கல்வி மற்றும் உயர்கல்விக்கு உள்ளூர் மொழியைப் பயன்படுத்துவதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் ஆராய்ச்சித் துறையிலும் உள்ளூர் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தி தினத்திற்குப் பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ எனக் கொண்டாடி கலாசாரத்தையும், வரலாற்றையும் வலுப்படுத்துங்கள் என முதலமைச்ச ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின், ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும் சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது. ஆனால், கலாசாரத்தையும் வரலாற்றையும் புரிந்துகொள்ள, இந்தியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்திய ஒன்றியத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’என்கிற பண்பாட்டிற்கு நேர் எதிரானது என குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும் வரலாற்றையும் அறிந்து கொள்ள முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழையும் மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்குத் தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்கிற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே என குற்றச்சாட்டியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திடத் தீக்குளித்து தங்கள் இன்னுயிரை அன்னைத் தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக் கொண்டது எங்கள் தமிழ்நாடு என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
1953 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் இந்தி தினத்தை அப்போதைய இந்தியப் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு இந்த நாளை இந்தி திவாஸ் நாளாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.