“பிகாரில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்கிய நிலையில் இதே போல் தமிழகத்திலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமூகநீதி திட்டங்களை செயல்படுத்த மாநில அளவிலும் தேசிய அளவிலும் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி கணக்கெடுப்பு தேவை என்று தெரிவித்து உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள ட்விட்டர் பக்கத்தில்,
பீகாரில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அவர் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி இன்று முதல் ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன!(2/4)#CasteBasedCensus
— Dr S RAMADOSS (@drramadoss) January 7, 2023
ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பீகாரில் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அனுமதி கோரி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் முதல் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அனைத்து கட்சிகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
இதற்கான மசோதாவை முதல்வர் நிதிஷ்குமார் அமைச்சரவையில் தாக்கல் செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில் அதன்படி பீகாரில் (ஜன. 7) முதல் ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்கென தனி நிதியாக ரூ.500 கோடி அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் இரண்டாவது மாநிலம் பிகார். ஏற்கனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது!(3/4)
— Dr S RAMADOSS (@drramadoss) January 7, 2023
இந்த நிலையில் பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் இரு கட்டங்களாக 45 நாட்கள் நடைபெறவிருக்கின்றன. மொத்தம் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கணக்கெடுப்பாளர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். சாதி, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இந்த கணக்கெடுப்பில் திரட்டப்படவுள்ளன.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் சாத்தியமற்றவை என்பதை முறியடிக்கப்போகும் இரண்டாவது மாநிலம் பிகார். ஏற்கனவே கர்நாடகம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு சாத்தியம் தான் என்பது இதன்மூலம் உறுதியாகிறது!
தேசிய அளவிலும், மாநில அளவிலும் வளர்ச்சி மற்றும் சமூகநீதித் திட்டங்களை செயல்படுத்த சாதிவாரி புள்ளிவிவரங்கள் தேவை. எனவே, 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும். அவர் தெரிவித்துள்ளார்.