ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான பருப்பு, பாமாயில் கிடைக்கும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 35,941 ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரையுடன் துவரம் பருப்பு, பாமாயில் எண்ணெயும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பும், பாமாயிலும் வழங்கப்படுவதில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்த புகார் குறித்து தமிழக அரசு வெறியிட்ட அறிக்கையில், ரேசன் கடைகளில் மே மாதத்திற்கு தேவையான 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு மற்றும் 2 கோடி பாமாயில் பாக்கெட்டுகள் வழங்குவதற்காக ஒப்பந்தம் கோரப்பட்டது.
அதனை தொடர்ந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குழுமத்தின் ஒப்புதலின்படி, 418 கோடி 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம், பொது விநியோகத் திட்டகுடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்குரிய பருப்பு, பாமாயில் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.