தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மூத்த தலைவரான ராஜா கடந்த வாரம் நாமக்கல்லில் நடந்த விழா ஒன்றில் பேசிய திமுக எம்பி “நீ இந்துவாக இருக்கும் வரை சூத்திரன். நீ சூத்திரனாக இருக்கும் வரை விபச்சாரியின் மகன். நீங்கள் இந்துவாக இருக்கும் வரை பஞ்சாயத்து (தலித்) மற்றும் இந்துவாக இருக்கும் வரை தீண்டத்தகாதவர்,” என்றார்.
மேலும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வீடியோ வைரலானதை அடுத்து கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.இதற்க்கு இந்து முன்னணி கட்சி மற்றும் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து ராசாவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், இந்துக்கள் பற்றி பேசிய கருத்துக்களை ஆ.ராசா திரும்ப பெற்று அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் உதயநிதி பாசறைக் கூட்டத்தின் மூலம் 1000 ராசாக்களை உருவாக்குவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பாரத பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகை தந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் திமுகவினரே அவரை விமர்சனம் செய்கின்றனர்.
ராசா தனது வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். புத்தகம் படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் அடுத்த மதத்தை இவ்விதம் பேசுவார். இந்துக்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள். நானும் இந்து தான். அனைவருக்கும் குடும்பம் உள்ளது. ராசா இவ்விதம் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மேலும் திமுகவில் உள்ள பாசறை கூட்டங்கள் அனைத்தும் உதயநிதி பாசறை கூட்டம் எனவும் அந்த பாசறை கூட்டத்தின் மூலம் 10 அல்ல ஆயிரம் ராசாக்களை அவர்கள் உருவாக்குவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.