அ.தி.மு.க.,வினர், 2014ல், பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. 13 கிலோ எடை கொண்ட இந்த கவசத்தின் விலை ரூ.3.25 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவுக்குப் பிறகு, மதுரை அண்ணாநகர் கிளையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியின் லாக்கர்களில் தங்கக் கவசம் வைக்கப்படும். இந்த லாக்கரின் கணக்கை ஓ பன்னீர்செல்வம் மற்றும் தேவரின் அண்ணன் மகள் மீனாள் நடராஜன் ஆகியோர் கூட்டாக வைத்துள்ளனர்.
தேவர் ஜெயந்திக்கு 144
இதற்கிடையில், அக்டோபர் 27 மற்றும் அக்டோபர் 30 ஆகிய தேதிகளில் மருது சகோதரர்கள் மற்றும் முத்துராமலிங்க தேவர் ஆகியோரின் பிறந்தநாள் போன்ற இரண்டு முக்கிய விழாக்கள் கொண்டாடப்பட உள்ளதால், ராமந்தபுரம் மாவட்ட நிர்வாகம் அக்டோபர் 25 முதல் 31 வரை 144 பிரிவின் கீழ் அவசர உத்தரவு பிறப்பித்தது. அந்த நாட்களில் அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை.
மேலும் முன் அனுமதியின்றி ஒரு இடத்தில் ஐந்து பேருக்கு மேல் கூடிவிடக் கூடாது. அண்டை மாவட்டங்களான சிவகங்கை மற்றும் மதுரையில் அக்டோபர் 27 முதல் 30 வரை மதுக்கடைகளும் மூடப்படும்.
அதிமுகவில் இரு அணிகள் இருக்கும் நிலையில் வங்கியில் இருக்கும் தங்க கவசத்தை பெறப்போவது எந்த அணி என்ற எதிர்பார்ப்பு எழத்தொடங்கியுள்ளது. இதுவரை, பன்னீர்செல்வம் நேரில் வந்தால் தான் தங்கக் கவசத்தை வெளியே எடுக்க முடியும். லாக்கரில் இருந்து வெளியே எடுத்தவுடன் தேவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி என்பதால், வங்கி செயல்படும் நேரத்திற்கு முன்னதாக, செவ்வாய்கிழமை பன்னீர்செல்வம் வங்கிக்கு வந்து கவசத்தை எடுத்துச் சென்றார். பின்னர் தேவர் உறவினர் காரில் ஏற்றி பசும்பொன்னுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு தேவர் சிலைக்கு அலங்காரம் செய்யப்பட்டது.
அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் பலர் இணைந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சென்று தாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதால் தங்களிடமே தேவரின் கவசத்தை வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளனர். இதனை அறிந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் வங்கியிடம் மனு அளிக்க தயாராகி வருகிறது.
இதே போன்று கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் பிரச்னை எழுந்தபோது மாவட்ட ஆட்சியர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு தங்க கவசத்தை பெற்று, நிகழ்வு முடிந்த பிறகு மீண்டும் வங்கியில் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.