தேசிய கட்சி என்று கூறப்படும் பா.ஜ.,வில் கூட, பல மாநிலங்களில் உள்கட்சி பூசல்கள் உருவாகி, பல எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டு, உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியில் நடந்து வரும் போரை வெளிப்படையாகவே ஆரம்பித்துள்ளார் காயத்ரி ரகுராம்.தமிழக பா.ஜ.,வில் சீனியர்களை ஒதுக்குவதாகவும், மூத்த அதிகாரிகளை இழிவுபடுத்துவதாகவும் புகார் கூறி வரும் காயத்ரி ரகுராம், பெண்ணாக இருந்தும் தன்னை சமூக வலைதளங்களில் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் மோசமாக சித்தரிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்:
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக பாஜகவின் கலை பண்பாட்டு பிரிவு மாநிலத் தலைவராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், தனது அணி நிர்வாகிகள் சிலரை நீக்கினார்.
ஆனால் அனுமதியின்றி அண்ணாமலை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காயத்ரி ரகுராம் தன்னிச்சையாக நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,
தமிழக பாஜகவில் இருந்து நடிகை காயத்ரி ரகுராமை (gayatri raghuram) 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்து, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடியாக நீக்கினார்.
One thing I learnt no dharma followers are with Annamalai JI. Even he isn’t a dharma follower- He speak ill about me while wearing Sabari Mala. Creating rumours and gossips and having vengeful words to create bad name for me.
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) December 29, 2022
பாஜக நிர்வாகி மீது குற்றசாட்டு
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது காயத்ரி ரகுராம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து தமிழக பாஜக தலைமையை டிவிட்டர் மற்றும் ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து வரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவினரிடமிருந்து மிகவும் மோசமான தனிப்பட்ட தாக்குதல்களை பெண்கள் மீது ஏற்படுத்துவதாக காயத்ரி ரகுராம் குற்றச்சாட்டியுள்ளார்.
ட்விட்டரில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் பாஜக நிர்வாகி ஒருவர் சபரிமலைக்கு மாலை அணிந்தும் என்னை பற்றி தவறாக பேசுகிறார். வதந்திகளையும், கிசுகிசுக்களையும் உருவாக்கி, பழிவாங்கும் வார்த்தைகளால் எனக்கு கெட்ட பெயரை உருவாக்க வேண்டும் என நோக்கில் அண்ணாமலை செயல்படுவதாக காயத்ரி ரகுராம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து பாஜகவில் அண்ணாமலையுடன் இருக்கும் யாரும் தர்மத்தை பின்பற்றுவதில்லை எனத் தெரிவித்துள்ள அவர் அண்ணாமலையும் தர்மத்தைப் பின்பற்றுவதில்லை என விமர்சித்துள்ளார்.