திருக்குறள்(thirukkural) பொதுமுறையை ஆங்கிலத்தில் ஜி.யு.போப் சரியாக மொழிபெயர்க்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று திருக்குறள்(thirukkural )மாநாடு நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். திருக்குறள் மாநாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார்
அப்போது அவர், “தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு எனக்கு திருக்குறள் வழங்கப்பட்டது. அதன் பிறகு 12க்கும் மேற்பட்ட நூல்களின் உதவியால் ஒவ்வொரு குறளின் முழுப் பொருளையும் தெரிந்து கொண்டேன்.
இந்த புத்தகத்தை வெறும் வாழ்க்கை நெறிமுறை புத்தகமாக மட்டும் காட்ட நினைக்கின்றனர். இந்த புத்தகத்தை முழுமையாக புரிந்து வாசிக்கும் அனைவருக்கும் அது தெரியும். ஆனால் திருக்குறள் கற்பிக்கும் ஆன்மீகம் பற்றி யாருமே கூறுவதில்லை. திருக்குறளை அதன் வடிவம் மாறாமல் மொழிபெயர்க்க வேண்டும்.
திருக்குறள்(thirukkural )ஆன்மீகம், நீதி சாஸ்திரம் மற்றும் தர்ம சாஸ்திரம் பற்றி பேசுகிறது. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில் அதை வெறும் வாழ்க்கை முறை புத்தகமாகவே காட்டியுள்ளனர்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஆக சிறந்த படைப்பு. நான் சொல்வதையோ, மற்றவர்கள் சொல்வதையோ கேட்காதீர்கள். திருக்குறளை நீங்களே படித்து முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். திருக்குறள் போதிக்கும் ஆன்மீகத்தைப் பற்றி யாரும் பேசுவதில்லை. திருக்குறள் அதன் முழுப் பெருமையையும் மீட்டெடுக்க வேண்டும்.
ஆதிபகவன் என்றால் முதன்மையான கடவுள் என்று நாம் அனைவரும் அறிவோம். ஆனால் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஜி.யு.போப் அதை சரியாக மொழிபெயர்க்கவில்லை. அதை `முதன்மை தெய்வம்’ என்று எழுதியிருக்கிறார். திருக்குறளை அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர்.