TNAssembly MKStalin speech-அதிமுக உறுப்பினர்களை அவைக்குள் அனுமதியுங்கள் என்று சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று 2வது நாள் தமிழக சட்டப்பேரவை கேள்வி நேரத்துடன் தொடங்கியது.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்குள் நுழைந்தனர்.
மேலும் கேள்வி நேரம் தொடங்கிய சில மணி நேரத்தில் , அதிமுக எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் ஏ.வ.வேலு பதிலளிக்க முனைகையில், அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் சபாநாகர் அப்பாவு அமைதி காக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
ஆனால் சபாநாகர் அப்பாவுவின் எச்சரிக்கையை மீறி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றபட்டனர்.
இந்த நிலையில், அதிமுக உறுப்பினர்களை அவைக்குள் அனுமதியுங்கள் என்று சபாநாயகர் அப்பாவுக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்போது பேசிய அவர்,”
கடந்த டிசம்பர் மாதம் 2001ஆம் ஆண்டு கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கள்ளசாராயம் அருந்தியவர்கள் 52 நபர்கள் மரணமுற்றும் 200 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தனர்.இது குறித்தது உரிய நடவடிக்கை சரியாக எடுக்கப்படவில்லை என்று எல்லோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டது ஏன்?” துரைமுருகன் விளக்கம்!
இதனையடுத்து மார்ச் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவையில் பாமக துணை தலைவர் ஜிகே மணி அவர்களும், வேல்முருகன் அவர்களும் ,அவையில் பேசியிருந்தனர்.
தற்பொழுது இந்த சம்பவம் குறித்து தன்னுடைய கவனத்திற்கு வந்த உடனே நான் தீவிர நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளேன் என்று முதலமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து அனைத்து உறுப்பினர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டு பதில் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அன்றைய காலகட்டத்தில் சரிவர நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தற்பொழுது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள காரணத்தால் தான் …. அன்றைய சம்பவத்தை பேச பயம் கொள்வார்கள் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று திட்டமிட்டு,
ஒரு நாடகத்தை அரங்கேற்றிவிட்டு, வீதிகளுக்கு சென்று விதிகளுக்கு புறம்பாக நடந்துகொண்டு மரபுகளுக்கு மாறாக குழப்பங்களை விளைவிக்க முயன்று வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
மேலும் ஜனநாயக முறைப்படி இந்த மாமன்றம் நடைபெற வேண்டும் என்பதில் தலைவர் கலைஞர் அவர்களும் நானும் அசையாத கொள்கை கொண்டவர்கள்.
மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பிரதான எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கொள்கை உறுதி கொண்டவன் நான்
தாங்களும் பல கோரிக்கைகள் வைத்து மாண்புமிகு பேரவை முன்னவர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தரலாம் என்று பரிந்துரை செய்தும் அமைச்சர்கள் முதலமைச்சராக இருந்தவர்கள் இங்கு நடந்து கொண்ட உரை தவிர்க்கப்பட வேண்டியது ஒன்று.
மேலும் பேரவை தரப்பர் பேரவை விதியின் கீழ் 120 விதியின்படி நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். எனினும் என்னுடைய வேண்டுகோளாக ஒன்றை சொல்ல கடமை பட்டு உள்ளேன்.
அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சபாநாயகர் அப்பாவுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இதனை ஏற்ற சபாநாயகர் அப்பாவு அதிமுகவினர் வெளியேற்றப்பட்டு, இன்று ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க விதித்த தடை உத்தரவை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.