நெஞ்சுவலி காரணமாக திமுக அமைச்சர் துரைமுருகன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2023 ஆம் ஆண்டிற்கான முதல்ஜனவரி 10 ஆம் தேதி தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கியது.தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர், வாசிக்க ஆரம்பித்தார்.
இதையடுத்து, உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார். இதனை தொடர்ந்து ஆளுநர் மீது பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் 2ஆம் நாளான நேற்று மறைந்த உறுப்பினர்கள், பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டு அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீரென ஏற்பட்டநெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகனுக்கு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இது குறித்து மருத்துவ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.