சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70 வது பிறந்தநாளையொட்டி அவர் கடந்து வந்த பாதை குறித்து புகைப்பட கண்காட்சியை இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த கண்காட்சியை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவமான கமல்ஹாசன் பிப்ரவரி 27 ஆம் தேதி திறந்து வைத்தார்.
அந்த கண்காட்சியில் முதலமைச்சர் முக.ஸ்டாலினின் சிறு வயது புகைப்படம் முதல் கலைஞர் கருணாநிதி உடன் இருக்கும் புகைப்படங்கள் வரை இடம் பெற்று இருந்தன. விசாக்காலத்தில் சிறையில் பெற்ற கொடுமைகள் எனப் பல அறியப் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தன. இந்த புகைப்பட கண்காட்சியை திமுகவினர் மட்டும் இன்றி பல்வேறு மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று முதலமைச்சரின் புகைப்படக் கண்காட்சியை நடிகர் ரஜினிகாந்த்நேரில் பார்வையிட்டார். அப்போது, நடிகர் ரஜினிகாந்த்துடன் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிலையில் தானும் முதலமைச்சர் முக ஸ்டாலின் இருக்கும் புகைபடத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், ‘முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படிப்படியாக உயர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சராக உள்ளார் என்றால்,
அது மக்கள் அவருக்கு கொடுத்த அங்கீகாரம். அவர் நீண்ட நாள் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.
மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேட்டில் சூப்பர் கலெக்ஷன் wat a memory என்று எழுதிக் நடிகர் ரஜினிகாந்த் கையெழுத்திட்டார். ரஜினியின் இந்த புகைப்படம் ஆனது சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.