முதல்வர் மு.க.ஸ்டாலினின் திமுக அரசு இரண்டாம் ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து 5 புதிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சட்டமன்றத்தில் திரு.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார்.
இத்திட்டங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச காலை உணவுத் திட்டம், சத்துணவுப் பற்றாக்குறையை ஒழிக்கும் திட்டம், நகர்ப்புறங்களில் சிறப்புப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நிறுவுதல் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் அமைப்பான ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ விரிவாக்கம் என அனைத்து 234 தொகுதிகளும் திட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் முக்கியமாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் முக ஸ்டாலின், அரசு பள்ளி குழந்தைகள் தூரம் மற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி செல்லும் போது காலை உணவை தவிர்ப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இலவச காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
அனைத்து வேலை நாட்களிலும் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கப்படும் என்றார். முதல் கட்டமாக, சில மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்படும். இத்திட்டம் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்பட்டு, மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும், என்றார்.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது என்று முதல்வர்திரு.ஸ்டாலின் கூறினார். “ஆட்சிக்கு வந்த பிறகு, 6 வயதுக்குட்பட்ட பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கவலையளிக்கும் புள்ளிவிவரங்கள் கிடைத்த நிலையில் அவர்கள் எடை குறைவாகவும், உயரம் அவர்களின் வயதுக்கு ஏற்றதாக இல்லை.
இதன் அடிப்படையில், குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் திட்டத்தை திட்டமிட்டுள்ளோம்,” என்றார். குழந்தைகளின் தேவைக்கு ஏற்ப மருத்துவ உதவி மற்றும் ஊட்டச்சத்து வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் கூறினார்.இந்த நிலையில் ,மதுரையில் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பிறகு, முதல்கட்டமாக, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் 1,545 காலை சிற்றுண்டி வழங்கபட்டிட்டது.
மேலும் இந்த திட்டத்தின் மூலம் தொடக்கப் பள்ளிகளில், 1.14 லட்சம் மாணவர்கள், பயன்பெறுவார்கள் என்றும், பின்னர், இத்திட்டம், மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும், தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இத்திட்டத்திற்காக அரசு ஏற்கனவே ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதுஎன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை சிற்றுண்டிக்கு வழங்கப்படும் உணவு வகைகளை தமிழக அரசு அரசாணையில் வெளியிட்டுள்ளது.
திங்கட்கிழமை – உப்புமா வகை
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசு உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமைரவா உப்புமா + காய்கறி சாம்பார்
செவ்வாய்கிழமை – கிச்சடி வகை
ரவா காய்கறி கிச்சடி
சேமியா காய்கறி கிச்சடி
சோள காய்கறி கிச்சடி
கோதுமை ரவாகாய்கறி கிச்சடி
புதன்கிழமை – பொங்கல் வகை
ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்
வெண்பொங்கல் + காய்கறி சாம்பார்
வியாழக்கிழமை – உப்புமா வகை
சேமியா உப்புமா + காய்கறி சாம்பார்
அரிசி+ உப்புமா + காய்கறி சாம்பார்
ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
வெள்ளிக்கிழமை – கிச்சடியுடன் இனிப்பு
எதாவது ஒரு கிச்சடி வகையுடன் (செவ்வாய்கிழமை உணவு வகையின்படி)
ரவா கேசரி
சேமியா கேசரி
மேலும் வாரத்தில் 2 நாட்களுக்கு உள்ளூரில் கிடைக்கக் கூடிய சிறு தானியங்களால் தயாரிக்கப்பட்ட காலை உணவை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் தரம் FSSAI நெறிமுறைககளை பின்பற்றி இருக்க வேண்டும் என்றும் குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை கண்டிப்பாக மீண்டும் பயன்படுத்தக் கூடாது போன்ற அறிவுரைகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.