அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் – நீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிமுகவினர் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமன செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு ஏற்கனவே தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு அமர்வு நீதிமன்றத்தில் இ.பி.எஸ் தரப்பு தாக்கல் செய்த மனு மீது விசாரணை முடிந்து இன்று காலை தீர்ப்பளிக்கப்பட்டது.
இதில் கடந்த மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும் அதில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி நியமனம் செய்தது செல்லும் என்றும், தனிநபர் நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தும் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
இதனை அறிந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஓபிஎஸ் க்கு எதிராகவும் இபிஎஸ் க்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர்.இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்துப் பேசிய ஜெயக்குமார்,” இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, ஒன்றரைக்கோடி தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தீர்ப்பு இது. தர்மம் வென்றிருக்கிறது; நியாயம் வென்றிருக்கிறது.
இனி அடுத்தகட்ட முடிவுகளைச் சட்ட வல்லுநர் குழுவினர் கவனித்துக் கொள்வார்கள்.” என்று தெரிவித்துள்ளார். மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காட்சிய வழியில், சட்டப்பூர்வமாகத்தான் பொதுக்குழு நடைபெற்றதாகவும், இனியும் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே செயல்படுவோம் எனக் கூறியுள்ளார்.இனி ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் மட்டும் இல்லை எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு, “ அவருடைய எதிர்காலம் ஜீரோ.” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தால் அது குறித்து கட்சி ஆலோசனை நடத்தும் என்றும் அணைத்து வழக்குகளையும் அண்ணா திமுக சட்டரீதியாகக் கொண்டு சென்று தங்களிடம் உள்ள நியாயத்தை நிரூபித்து வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.