நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவான நிலையில் தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவிதுள்ளார்.
நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது .நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில்,பாஜக 293 இடங்களிலும் , காங்கிரஸ் – 232 இடங்களுக்கும் மற்றவை – 18 இடங்களையும் கைப்பற்றியது. ஆனால் 272 என்ற தனிப்பெரும்பான்மை கொண்ட எண்ணிக்கையை பாஜகவால் பெறமுடியவில்லை.
அந்த வகையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக புதிய சின்னத்தில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 2024 மக்களவைத் தேர்தல் : தோல்வியைத் தழுவிய BJP- வின் Star Candidate!
இதேபோல விசிகவும் 2 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று அங்கீகாரம் பெற்ற கட்சியாக மாறியுள்ளது.இந்நிலையில், மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தவெக தலைவர் விஜய் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், ‘நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற்று, மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெறும் தகுதியை வென்றெடுத்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.