பீஹாரில் சாராயமில் லாமல் அரசு நன்றாக நடக்கிறது. தமிழகத்திலும் அதேபோல் செய்ய முதல் வர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறினார்.
வேலுார், பா.ஜ., அலு வலகத்தில், வேலுார் லோக்சபா தொகுதி ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர் களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கள்ளச்சா ராயம் குடித்து, 64 பேர் இறந்துள்ளனர். இது பற்றி, அரசுத் தரப்பில் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்கவில்லை.
சட்டசபையில், எதிர்க் கட்சிகளின் குரல்வளையை சபாநாயகர் நெரிப்பது எதிரானது. அரசுக்கு இந்த பிரச்னையை மறைக்க வேண்டும் என்ற தீய நோக் கம் வெளிப்படையாக தெரிகிறது.
இதையும் படிங்க: ”அமெரிக்கா செல்லும் முதல்வர்..” ரகசியத்தை போட்டுடைத்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா!
இருப்பினும், ஊடகங் கள் வாயிலாக இந்தப் பிரச்னை தெரிந்து கொண்டு தான் இருக்கிறது. கள்ளச் சாராய மரணத்துக்கு சி.பி. சி.ஐ.டி., விசாரணை என்பது கண் துடைப்பு.
ஆகவே, இந்த விவகா ரத்தை சி.பி.ஐ., விசாரிப்ப துதான் சரியாக இருக்கும். மடியில் கனம் இருப்பதால் தான் ஸ்டாலினுக்கு பயம் இருக்கிறது. கள்ளச்சாராய மரண விவகாரத்தில் விசா ரணை நியாயமாக நடக்க வேண்டும்.
போலீசார் கள்ளச்சாராய ரெய்டுக்கு சென்றால், கள் ளச்சாராயம் காய்ச்சுபவன் வீட்டிலேயே, ‘ஸ்டாலின் தான் வராரு, விடியல் தர போறாரு’ என ஒட்டியி ருக்கிறது. ‘கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு விடி யல் தருபவர்’ என்று தான் அதற்கு அர்த்தம்.
சாராயம் இல்லாமல் பீஹாரில் பா.ஜ., கூட் டணி ஆட்சி நடக்கிறது. தமிழகத்திலும் அதே போல் செயல்பட முதல் வர் பொறுப்புணர்வுடன், நல்ல குடிமகனாக நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்