Dinakaran wishes– பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டி டி வி .தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மஹாவீர் ஜெயந்தி என்பது சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும்.அந்த வகையில் ,இந்த ஆண்டு மகாவீரா் ஜெயந்தி ஏப்ரல் மாதம் 21 ம் தேதி வருகிறது. நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கடைப்பிடிக்க மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டி டி வி .தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தீவிர களப்பணியாற்றி வெற்றியை உறுதி செய்த கழக தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி – டிடிவி!
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, அமைதி, அகிம்சை, வாழ்க்கை, மனிதநேயம் பற்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறிக்கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.