தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், தைலாபுர தோட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் சமூக நீதி குறித்து தொடர்ந்து விடாமல் பேசிவருவது பாமக தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை திமுக திருத்தி அமைக்க வேண்டும்.
நான்காவது கட்டமாக தேர்தல் ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநானயக கூட்டணி வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ” தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் இரண்டு ஆண்டுகளாகியும் தமிழக அரசு வழங்கவில்லை .
அன்புமணி ராமதாஸ் , ஜிகே மணி ஆகியோர் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மனு அளித்தும் தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்காததால், இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.