அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவை குறித்து எடப்பாடி தெரிவித்துள்ள கருத்து அதிமுக நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் நடந்து முடித்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக,2019 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக 1 % அதிகமாக பெற்றுள்ளது.
மேலும் திமுக 33 % பெற்று இருந்தது. ஆனால் தற்பொழுது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 26.4% வாக்குகளை பெற்று சரிவடைந்துள்ளது. அதே போல 2014ஆம் ஆண்டு அதிமுக கூட்டணி அமைத்த பாஜக கட்சி தேர்தலில் எடுத்த வாக்கு சதவீதம் 18.0% ஆகும்.
இதையும் படிங்க: ”வேட்பாளரை அறிவித்த NTK.. ”சூடுபிடிக்கும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்!
மேலும் தற்பொழுது நடந்த முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 18.02%மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பூஜ்யத்தை பெற்றுள்ள நிலையில்,எதிர்கட்சிகளுக்கும் தொலைக்காட்சி செய்திகள், சமூகவலைத்தளங்களில் அதிமுக வாக்கு எண்ணிக்கை சரிந்துள்ளதாக போன்ற பிம்பத்தை காட்டுகிறது. இது உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தார்.
தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்புக் குழு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்க்கு பதில் அளித்த அவர்,” “அதெல்லாம் ஒரு குழுவா? கேள்வியாக கேட்கலாமா? ரோட்ல போறவர்றவங்க ஒரு குழு அமைச்சா ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கனும்” என கிண்டலாக பதிலளித்தார்.
முன்னதாக வரும் 2026-ல் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னமும் 18 மாதங்களே உள்ள நிலையில் டிசம்பர் மாதத்துக்குள் அதிமுக ஒன்றிணைந்தாக வேண்டும் என கட்சியை ஒருங்கிணைப்பதற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்திருப்பதாக முன்னாள் எம்பி-யான கே.சி.பழனிசாமி, முன்னாள் எம்எல்ஏ-வான ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப் பரப்புச் செயலாளரான வா.புகழேந்தி ஆகியோர் குழு அமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.