மது ஆலையை மூடுவோம் மதுக் கடையின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக வருடா வருடம் உச்சி வரம்பு நிர்ணயத்தை மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியை ஈடுபட்டு வருகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை நட்சத்திர விருதுகள் வாருங்கள் ஆகிய இடங்களில் மட்டுமே மதுபானங்கள் அருந்த அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் மதுபானங்கள் பரிமாற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருமணம் மண்டபங்கள் விளையாட்டு அரங்கங்கள் போன்ற பொது இடங்களில் மது அருந்தக் கட்டணம் செலுத்தி மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் உடன் துணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் மூலம் சிறப்பு உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என்று புதிய அரசாணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த சிறப்பு உரிமம் மூலம் வீடுகளில் நடத்தப்படும் வார்த்தைகள் கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் மதுபானங்கள் கருத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு இந்த கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வரும் நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசாணைக்குக் கடுமையாக விமர்சித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பக்கத்தில்,
கல்யாண மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில், மதுவுக்கு அனுமதி வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது இந்த திறனற்ற திமுக அரசு.
மது ஆலைகளை மூடுவோம், மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக,வருடா வருடம் உச்ச வரம்பு நிர்ணயித்து மது விற்பனையைப் பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
சட்டம் ஒழுங்கு ஏற்கனவே பொதுமக்களுக்குச் சவாலாக மாறிவிட்ட நிலையில், திமுகவினர் நடத்தும் மது ஆலைகளின் வருமானத்தைப் பெருக்குவதற்காகசமுதாயச் சீர்கேடுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து திமுக ஈடுபட்டு வருவதை, வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடனடியாக இந்த அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக பாஜக
சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெறிவிக்கபட்டுள்ளது.