பாஜகவை விமர்சனம் செய்திருந்த ஜெயக்குமாரை அணைந்து போயிருக்கின்ற நெருப்புடன் விளையாடுவது எங்களுக்குப் பிடிக்காது எனக் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி கிண்டல் அடித்துள்ளார்.
டிஎம்கே பைல்ஸ் என்ற பெயரில் திமுகவினரின் சொத்து பட்டியலை பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த 14ஆம் தேதி சொத்து பட்டியலை வெளியிட்டார். அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்து விபரங்கள் அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்களும் எழுந்தது.
மேலும் திமுகவினர் சொத்து பட்டியல் தொடர்பாக அண்ணாமலை மன்னிப்பு கேட்கக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அண்ணாமலைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் சொத்து பட்டியல் தொடர்பாக இணையதளத்தில் வெளியிட்ட
காணொளியை நீக்க வேண்டும் என்றும் குற்றச்சாட்டுகளுக்கு இழப்பீடாக 5 கோடி ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
மேலும் ஆட்சியிலிருந்த அனைத்து கட்சிகளின் சொத்து பட்டியல் விவரத்தை அண்ணாமலை வெளியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாஜகவின் கூட்டணி இருக்கும் அதிமுகவும்,கடும் கண்டனம் தெரிவித்தது. கடந்து சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி திருப்பப் பழனிச்சாமி முதிர்ச்சியான தலைவர்களைப் பற்றிக் கேளுங்கள் என்று தெரிவித்து அண்ணாமலை விபத்து இருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார் திமுகவைப் போன்று அதிமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர் கேள்விக்கு, இதற்குப் பதில் அளித்த ஜெயக்குமார் எங்களை தேவையில்லாத தொட்டால் நெருப்போடு விளையாடுவதற்குச் சமம் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் ஜெயக்குமாரின் இந்த பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அமர் பிரசாத் ரெட்டி தனது பீட்டர் பக்கத்தில் எங்களைத் தேவையில்லாமல் டச் பண்ணினால் நெருப்போடு விளையாடுகிற மாதிரியான அண்ணன் ஜெயக்குமார் சொல்லி இருக்காரு. அணைந்து போன நெருப்போடு விளையாடுகிறது எங்களுக்குப் பிடிக்காத என முதல்ல நீங்க எரியும் நெருப்பாக்கிட்டு அப்புறம் வாங்க நாளை எப்படி விளையாடுவோங்கிறத ரசித்து பாருங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்