தென் சென்னை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி நடைபெற்றது. அதன்படி தஞ்சை தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
அதன்படிவாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை, ஆயுதப் படை, தமிழக போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் வளாகம் முழவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாக்கு எண்ணும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. ஓட்டு எண்ணிக்கை ஆனது காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதையும் படிங்க: முன்னணி வகிக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்களின் விவரம்
அந்த வகையில் மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்செல்வி போட்டியிட்டு உள்ளனர்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்குக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.
தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் முதல் சுற்று முடிவில் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,258 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.
பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 14, 745 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 9,176 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 3,951 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.