Adirampattinam பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடற்பகுதியில் 100மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால் படகுகள் சேற்றில் சிக்கிய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக கடல் பகுதியில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் அறிவிக்கப்படும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். விசை படகுகள், மீன்வலைகள் மற்றும் மீன் பிடி உபகரணங் களை சீரமைக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபடுவார்கள்.
அந்த வகையில்,இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவு முதல் தொடங்குகிறது. இது வருகிற ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலில் இருக்கிறது.
இதையும் படிங்க: மூடநம்பிகையால் பறிபோன இளைஞரின் உயிர்.. உபி -யில் நடந்த கொடூரம்!
இந்த நிலையில் தஞ்சாவூர் அருகே மறவக்காடு, அதிராம்பட்டினம், ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர்.
பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடற்பகுதியில் பைபர் படகுகள் மூலம் மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பும் பொது திடீரென 100மீட்டருக்கு கடல் உள்வாங்கியது. இதனால் படகுகள் சேற்றில் சிக்கின.மேலும் இந்த சம்பவதால் மீனவா்கள் மற்றும் கடலோரப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இதனால் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கடற் பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.