கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு தரப்பில் அறிவிப்பு விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி(RN ravi) வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி,நெல்லை, ஆகிய தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிவரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது.இதனால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இந்த நிலையில்,கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு தரப்பில் அறிவிப்பு விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி(RN ravi) வெளியிட்டுள்ள பதிவில், “தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருக்கவும், மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுத் துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. விரைவில் நிலைமை சீரடைய பிரார்த்தனைகள்” என்று தெரிவித்துள்ளார்.