ஆருத்ராகோல்டு மோசடி வழக்கில் நடிகரும் பாஜக உறுப்பினருமான ஆர் கே சுரேஷிடம்விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை சென்னை வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆருத்ராஎன்ற பெயரில் நீங்க வந்து நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் போட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் எனக்கவர்ச்சிகரமான விளம்பரத்தைக் கொடுத்து பல்லாயிரம் கோடிகளைப பொதுமக்களிடமிருந்து வாங்கி உள்ளன.
இந்த வழக்கானது தற்பொழுது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆருத்ரா தனியார் லிமிடெட் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் 2,00438 கோடி மோசடி செய்துள்ளதாகப் புகார் வந்துள்ளது.

இதில் அதிக அளவு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்கள் முதலீடு செய்து உள்ளன. இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளால் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் மூடக்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் முக்கிய இயக்குநர்களாகச் செயல்பட்டு வந்த ராஜசேகர்,உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளன.
இந்த நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தும் எப்படியோ இயக்குபவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனை எடுத்து இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் ரூசோ என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அதேபோல் தமிழ் திரைத்துறையில் ஒயிட்ரோஸ் என்ற திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். மேலும் அவர் தயாரித்துள்ள படத்தில் ரூசோ காவல்துறைஅதிகாரியாக ஒரு கதை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சீட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இப்படிப் பல முகங்களைக்
கொண்ட ரூஷோ பல லட்சம் மதிப்புள்ள வாகனங்களில் வலம் வருவதையும் பகுதியில் வாடிக்கையாகக்
கொண்டு உள்ளார்.

இந்த நிலையில், திரைப்பட தயாரிப்பாளராக இருந்த வரும் இவர், பல திரைப்பட நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடன் நெருக்கமாக எடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவருடன் நெருக்கமாக இருந்த தயாரிப்பாளர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்களை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், ஆருத்ரா நிறுவனத்தில் இந்த நிலையில் அந்த நிறுவனத்தின் இயக்குநரும் பாஜக முக்கிய உறுப்பினருமான ஹரிசை கடந்த சில நாட்களுக்கு முன்பு காவல்துறையினர் கைது வைத்தனர்.
இந்த நிலையில் ரூசோ நடிக்கும் திரைப்படத்தை ஆர் கே சுரேஷ் தயாரிக்க உள்ளது காவல்துறையினர் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது .மேலும் இது குறித்து ரூசோவிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய தலைநகராக இருப்பதால் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக்

கோரி அவருக்கு 12 கோடி ரூபாய் அளித்ததாக அவர் தெரிவித்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக இன்னும் சில கோடிகளைச் செலவு செய்தால் ஆர்கே சுரேஷ் கூறியதாக வாக்குமூலம் ஒன்றை அளித்த உள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆர் கேசுரேஷ் தற்பொழுது துபாயில் தலைமறைவாகிய உள்ளதாகவும் அவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் பொருளாதார குற்றவியல் காவல்துறைனர் தெரிவித்துள்ளனர்.