இடுக்கியில் தொண்டையில் பரோட்டா சிக்கிக் கொண்டதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பனையார் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. லாரியில் கிளீனராக பணியாற்றி வந்துள்ளார். பாலாஜி அடிக்கடி பரோட்டா சாப்பிடும் பழக்கம் கொண்டனர்.
நேற்றிரவு லாரியில் இடுக்கிக்கு பொருள்களை கொண்டு சென்ற பாலாஜி லாரியிலேயே தங்கியுள்ளார். இரவு உணவுக்காக டிரைவரும் , இவரும் பரோட்டா வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
அப்போது, பரோட்டா பாலாஜியின் தொண்டையில் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால், விழுங்க முடியாமலும் மூச்சு விட முடியாமலும் திணறியுள்ளார். பதறிப் போன டிரைவர், உடனடியாக பாலாஜியை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் பாலாஜி உயிரிழந்தார். 34 வயதான பாலாஜிக்கு சாந்தி என்ற மனைவியும் அர்ஜுன், அஸ்வின் என்ற இரு மகன்களும் உள்ளனர்.
இதனை தொடர்ந்து கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கி விடனர். மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநிரக கள் ,இருதய கோளறு ,நிரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு என்றும் மைதாவில் உள்ள குளுடேன்(Gluten) ப்ரோடீன் மிகவும் சிக்கலான வடியும் கொண்டது.
இதனால் பரோட்டா செரிமானமாக நீண்ட நேரம் ஆகும்.மேலும் அதனால மைதா(பரோட்டா ) உட்கொள்ளும் பொழுது செரிமான சிக்கல்(Gluten intolerence) ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் மைதாவின் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.