தமிழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ் தொடரை போன்று செயல்படுகிறார் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்
இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்,
தமிழகத்தில் ஆளுநர் ஆர் எஸ்எஸ் ஆதரவாக செயல்படுகிறார் என்றும் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் பணிகளை தொடங்கலாம் என்றும் தெரிவித்தார். மேலும் அவர் செயல்படும் அனைத்து செயல்களும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது என்றும் இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு அவமதிக்கக் கூடிய செயல் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தமிழக ஆளுநர் தொடர்ந்து பொதுதுறையில் செயல்படாமல் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். மேலும் கடந்த சில தினங்களாக தமிழ்நாடு என்ற வார்த்தையில் சர்ச்சை எழுந்து வருகிறது தமிழகம் என்றாலும் தமிழ்நாடு என்றாலும் ஒன்றுதான் எனவும் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் கொள்கைகளுக்கு எதிரானவர் என்றும் திராவிட கோட்பாட்டிற்கு எதிரானவர் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை முட்டுக்கட்டை போட்டுள்ள செய்ய வேண்டிய வேலையை செய்யாமல் மகாராஜாவைப் போல தனி மாநிலத்தை நடத்த முயல்வது தவறான முன்னுதாரணம் ஆகும்.
மேலும் தமிழக ஆளுநர் ரவிக்கு அரசியல்வாதியாக பணியாற்றுவது அனைத்து தகுதிகளும் உள்ளது ஆனால் தமிழக ஆளுநராக பதவி வகிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் வேற்றுமையில் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித மாலத்தை கலந்த அநாகரத்தை செய்தவர்கள் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இதில் அரசு நேரடியாக தலையிட்டு அதில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஜனவரி 11ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஈஷா யோக மையத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணம் குறித்து செய்தியாளர் கேள்விக்கு பதில் அளித்த தொல் திருமாவளவன் ஈஷா மையத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாகவும், அவர் எப்போது யோக மையத்தில் இருந்து வெளியேறினார். ஏன் அவர் தப்பித்து ஓடும் நிலை ஏற்பட்டது சடலமாக கண்டெடுக்கப்பட்ட கூடிய அவலம் நிகழ்துள்ளது போர்த் செய்திகளுக்கு தீவிர விசாரணை வேண்டும்.
இந்த இறப்பிற்கு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து இதனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்கள் ஈஷா யோக மையத்தில் நடைபெறாத வண்ணம் இருக்க கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் சாவ தெரிவித்துள்ளார்