12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர் சின்னத்துரையை அழைத்து இயக்குநர் பா.ரஞ்சித் வாழ்த்து தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரில் உள்ள கூலித் தொழிலாளி முனியாண்டி – அம்பிகாபதி தம்பதிக்கு 17 வயதில் சின்னதுரை என்ற மகனும் 14 வயதில் சித்ரா செல்வி என்ற மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவரும் வள்ளியூரில் உள்ள அரசு பள்ளியில்( சின்னதுரை 12 ஆம் வகுப்பு) படித்து வந்த நிலையில் பள்ளியில் சக மாணவர்களுக்கு இடையே சாதி ரீதியாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் சிலர் அத்துமீறி நுழைந்து சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
இதையும் படிங்க: ”நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி…” மாணவர் சின்னதுரைக்கு உறுதியளித்த ஸ்டாலின்!
இருவரும் படுகாயமடைந்த நிலையில் உறவினர்கள் மூலம் மீட்கப்பட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சக மாணவர்கள் 4 பேர் மற்றும் இடை நின்ற மாணவர்கள் 2 பேர் உட்பட 6 பேரை நாங்குநேரி போலீசார் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது இதில் தேர்வு எழுதிய சக மாணவர்களால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னத்துரை 469 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து சின்னதம்பிக்கு முதலமைச்சர் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், மாணவர் சின்னத்துரையை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் எவ்வித உதவியாக இருந்தாலும் தனது நீலம் பண்பாட்டு மையம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். தற்பொழுது இந்த புகைபடங்கள் அனைத்தும் இணையாயத்தில வைரலாகி வருகிறது.