நீண்டகாலமாகவே வேற்றுகிரக வாசிகளின் கற்பனைகதைகளும்,காமிக்ஸ் படிப்பவர்களின் இடையே ஆர்வத்தை தூண்டுவது மட்டும் இல்லாமல் ஆச்சர்யத்தையும்,ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்த நிலையில் ஏலியன்கள் குறித்த தகவல்கள் இந்தியாவில் உலா வருவது தொடர்கதையாக உள்ளது.மேலும் இது பற்றி பல்வேறு விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் திடீரென தோன்றிய மர்மமான ஓடும் ரயில் போன்ற வெளிச்சம், விளக்குகள் அணியெடுத்து நகர்வது போன்று தோன்றியது. லக்னோ, கான்பூர் மற்றும் பிற நகரங்களில் வசிக்கும் பலர் சமூக ஊடகங்களில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இரவில் திடீரென ரயில் ஓடுவது போன்று ஒரு தோற்றம் நடுவானில் தோன்றி பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Strange light forming a string were seen in many parts of Uttar Pradesh. This video was taken in Auraiya. pic.twitter.com/vgfE2C4luc
— Haidar Naqvi🇮🇳 (@haidarpur) September 12, 2022
இந்த நகரும் ஒளி, லக்னோ, கான்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்பட்டது. இதற்கான காரணம் தெரியாத நிலையில் பலர் அவர்களின் கற்பனைக்கு ஏற்ற பெயர்களைக் கொடுத்து வருகின்றனர். அதில் அதிகம் கூறப்பட்டது நகரும் ரயில் என்பது தான்.
இந்த மர்மமான நகரும் வெளிச்சம் ஷ்ரவஸ்தி, ஹர்தோய், லக்னோ, கான்பூர், கன்னோஜ் மற்றும் மலிஹாபாத் இடங்களில் தென்பட்டதாக அந்த பகுதி இணைய வாசிகள் புகைப்படம் மற்றும் காணொளிகளுடன் பதிவிட்டுள்ளனர்.
இது ஏலியனின் செயலாக இருக்குமோ என்ற சந்தேகமும் பலரிடம் ஏற்பட்டுள்ளது. ஆங்கில திரைப்படங்களில் தோன்றுவது போன்றும், ஹாரி பாட்டர் திரைப்படத்தில் வரும் வானில் பறக்கும் ரயில் போன்றும் இந்த காட்சி உள்ளது.
இது ஏலியனும் இல்லை மர்மமான வானில் பறக்கும் ரயிலும் இல்லை என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அது ஸ்டார்லிங்க்-51 செயற்கைக்கோள் ரயில் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் ஸ் (Space X) நிறுவனத்தின் ஸ்டார்லிங்க் இணையச் செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளனர்.
இருப்பினும், வல்லுநர்கள்இ இந்த ஒளி விளக்குகளை ஏலியன்கள் (யுஎஃப்ஒக்கள்) இல்லை என்று நிராகரிக்கின்றனர்.மேலும் இது குறித்து குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் (GUJCOST) ஆலோசகர் நரோட்டம் சாஹூ தெரிவிக்கையில்,SpaceX Falcon 9 ராக்கெட் 51 ஸ்டார்லிங்க் இணையச் செயற்கைக்கோள்களைக் கொண்டு புளோரிடா பகுதியிலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
அந்த வெளிச்சமே உத்தரப்பிரதேசத்தில் வானில் தோன்றி நகரும் வெளிச்சம் என்று கூறப்பட்டுள்ளது.இது எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இயக்கப்படும் செயற்கைக்கோள் இணைய சேவையாகும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் இதுபோன்ற மர்மமான விளக்குகள் இருப்பது இது முதல் முறையல்ல. முந்தைய சம்பவங்களில் 2021 இல் பஞ்சாபின் பதான்கோட் மற்றும் குஜராத்தின் சவுராஷ்டிராவில் ஒளி விளக்குகள் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
SpaceX Falcon 9 ராக்கெட் 51 ஸ்டார்லிங்க் இணையச் செயற்கைக்கோள்களைக் கொண்டு புளோரிடா பகுதியிலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது. அந்த வெளிச்சமே உத்தரப்பிரதேசத்தில் வானில் தோன்றி நகரும் வெளிச்சம் என்று கூறப்பட்டுள்ளது.இது எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மூலம் இயக்கப்படும் செயற்கைக்கோள் இணைய சேவையாகும் என்று தெரிவித்துள்ளனர்