இசையா, மொழியா என்று இளையராஜா, வைரமுத்து இடையே எழுந்துள்ள சர்ச்சைக்குள், இணையப் பதிவு மூலமாக ஏ.ஆர்.ரஹ்மான் வாண்ட்டடாக வண்டி ஏறி உள்ளதாக கூறப்படுகிறது.
தனது பாடல்களுக்கு காப்புரிமை கோரி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்மூலம் இசையா? மொழியா என்னும் சர்ச்சை தமிழ் திரையுலகில் எழுந்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இசையும் மொழியும் சேர்ந்தால்தான் பாடல். இதை புரிந்தவர் ஞானி, புரியாதவர் அஞ்ஞானி என்று வைரமுத்து பேசியிருந்தார்.
இதனால் வைரமுத்துவுக்கு எதிர்வினையாக கங்கை அமரன் கொதித்து எழுந்து வீடியோ பதிவினை வெளியிட்டார். அதில் இளையராஜாவல் வளர்ந்தவர்தான் வைரமுத்து. நன்றி மறக்க வேண்டாம். இளையராஜாவைப் பற்றி பேசினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றெல்லாம் பொங்கியிருந்தார்.
இதற்குப் பதில் அளிக்கும் விதமாக வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், மக்கள் பேசத் தொடங்கிவிட்டதால் தான் பேசப் போவதில்லை என்று என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் மதுரை வலையங்குளத்தில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து பங்கேற்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இளையராஜா குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்து விட்டார். அதே நேரம் எம்.எஸ்.விஸ்வநாதன் – கண்ணதாசன் குறித்த கேள்விக்கு இருவரும் உயிரும் உடலும் போன்றவர்கள் என்று பதில் கூறிவிட்டு சென்றார்.
இதுவரை இளையராஜா – வைரமுத்து விவாதமாக சென்று கொண்டிருந்த சர்ச்சைக்குள் ஏ.ஆர். ரஹ்மானும் வாண்ட்டடாக வண்டி ஏறி இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது எக்ஸ்தளப் பக்கத்தில் பதிந்த கருத்து இப்படி எண்ண வைத்துள்ளது.
மறைந்த நடிகர் குமரிமுத்து, மெத்தப்படித்துவிட்டோம் என தற்புகழ்ச்சி கொள்ள வேண்டாம் என்று சங்கத் தமிழ்ப் பாடல் குறித்து அர்த்தம் சொல்லும் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தனது பக்கத்தில் பதிந்துள்ளார்.
இது இளையராஜாவை மறைமுகமாக குறிப்பிட்டு, ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளாரா என சமூக வளத்தலங்களில் மீண்டும் விவாதப் பொருளாகி உள்ளது.