செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்தின் அடிப்படையில் பணி நியமனங்களுக்கு பணம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.ஆனால் இந்த மனு மீதான விசாரணை உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு – நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு!
இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ் . ஓஹா , உஜ்ஜல் புயாண் ஆகியோர் அமர்வுக்கு முன் இன்று (மே 6 ) விசாரணைக்கு வந்தது.அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறினர் ஆர்யமா சுந்தரம் ஆஜராகி ,” செந்தில் பாலாஜி கடந்த 328 நாட்களாக சிறையில் உள்ளார். எனவே அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வாதத்தை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து அமலக்காய்ததுரை தரப்பில் சொலிசிட்டர் ஜனரல் துஷார் மேத்தா ஆஜராகி,” இந்த ஜாமீன் மனு மீது பதிலளிக்க 5 நாட்கள் ஆவகாசம் கோரிக்கை வைத்தார்.இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை மே 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.