மக்கள் தனக்காகப் பேசத் தொடங்கிவிட்டதால் தான் எதற்கும் பதில் சொல்வதில்லை என்னும் தொனியில் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதற்கு இணையவாசிகள் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இசை பெரியதா, பாடல் வரிகள் பெரியதா என்னும் பட்டிமன்றம் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அலையடித்துக் கொண்டிருக்கிறது. இளையராஜா கூறிய கருத்துக்கு பதில் தெரிவிப்பது போல வைரமுத்துவும் பேசி வைக்க, அதற்கு கங்கை அமரன் ஆவேசமாக பதிலடி கொடுத்திருந்தார்.
வைரமுத்து இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரிக்கை தொனியில் வீடியோவும் பேசி வெளியிட்டிருந்தார்.
இதன்பின்னரும் நீருபூத்த நெருப்பாய் இருந்துவருகிறது இந்த சர்ச்சை.
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கவிதை வடிவில் பதிவிட்டுள்ளது மீண்டும் நெட்டிசன்களிடையே விவாதப் பொருளாகி இருக்கிறது.
குயில்
கூவத் தொடங்கிவிட்டால்
காடு தன் உரையாடலை
நிறுத்திக்கொள்ள வேண்டும்
புயல்
வீசத் தொடங்கிவிட்டால்
ஜன்னல் தன் வாயை
மூடிக்கொள்ள வேண்டும்
வெள்ளம்
படையெடுக்கத் தொடங்கிவிட்டால்
நாணல் நதிக்கரையில்
தலைசாய்த்துக்கொள்ள வேண்டும்
மக்கள்
தனக்காகப்
பேசத் தொடங்கிவிட்டால்
கவிஞன் தன் குரலைத்
தணித்துக்கொள்ள வேண்டும்
அதுதான்
நடந்து கொண்டிருக்கிறது
இவ்வாறு வைரமுத்து தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவின் பதிவுக்கு பல்வேறு வகையிலான கமெண்டுகளை நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர். அவற்றில் ஒரு சில…
AlliRani👑 @siriusful1
சார், அவர் வாயாலேயே , அவரே தன்னை வெளிப்படுத்திக் கொள்வார் விடுங்கள். இவ்வளவு சுயநலம், பேராசை கொண்ட மனிதனை தமிழ்ச்சமூகம் ரொம்பநாள் மதிக்காது.அம்பேத்கரை சுயலாபத்திற்காக கண்டவர்களோடு ஒப்பிடும் பதவிமோகம்.பணத்தை எப்படி பயன்படுத்துவது என விஜயகாந்தை பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும்.
GOWTHAM SURESH @Gowthamsure23
உங்கள் வரிகள் அல்லாத இசையை மக்கள் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் அதனால் இனிமேல் நீங்கள் எழுதுவதை நிறுத்தினால் போதும் வன்ம முத்து. உலகத்தரம் வாய்ந்த இசைஞானி எங்கே…??? நீங்கள் எங்கே….?? சும்மா கம்பு சுற்ற வேண்டாம்.
Subash @Subash1929969
இளையராஜா பத்தி பேசுனதுக்கு ஊருல எல்லாரும் உங்கள திட்டாராங்க அதனால நீங்க மூடிட்டு இருக்கீங்க இததான் சொல்ல வரிங்க.
மெய்.பாலராமலிங்கம் @balueniyagam
உலகத்தமிழர்களின்
அடையாளமாகத் திகழும்
கவிப்பேரரசுக்கு
ஆதரவாக என்றும்
மக்கள் களமாடிக் கொண்டுதான் இருப்பார்கள்
கவியை களங்கப்படுத்த
நினைப்பவர்கள்
களங்கிக் கொண்டு
இருக்கிறார்கள்