பெங்களூருவில் Rapido Bike Taxiயில் பயணம் செய்த பெண்ணுக்கு ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஏப்ரல் 21 ஆம் தேதி பெண் ஒருவர் இரவு 11:10 மணிக்கு இந்திராநகருக்கு ரேபிடோ பைக்கை முன்பதிவு செய்து உள்ளார். மேலும் இரவு 11 மணியளவில் வந்த ஓட்டுநர் அப்பெண்ணை பைக்கில் ஏற்றி அழைத்துச் சென்றார்.
அப்போது பைக் ஓட்டுநர் ஓடிபி எண்ணை சரிபார்ப்பதாக கூறி பெண்ணின் செல்போனை வாங்கிக்கொண்டு பைக்கை வேறு இடம் நோக்கி ஓட்டியுள்ளார்.மேலும் அந்த பெண் தனது போனை திரும்பப் பறித்து பார்த்தபோது டிரைவர் குடிபோதையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அந்தப் பெண் பலமுறை கேள்வி எழுப்பிய போதும், ஓட்டுனர் 60 கி.மீ வேகத்தில் தொடர்ந்து ஓட்டிச் சென்றார்.இதனை தொடர்ந்து அப்பெண் ஓட்டுநரிடம் எச்சரித்ததோடு சத்தம் போட்டுள்ளார்.
ஆனால் ஓட்டுநர் அதனை பொருட்படுத்தாமல் அப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால்,அந்த பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடும் மோட்டார் சைக்கிளில் இருந்து குதித்ததுள்ளார்.
மேலும் இந்த காட்சி சாலையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.இந்த நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கபட்ட பெண் காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

மேலும் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் டிண்ட்லுவைச் சேர்ந்த 27 வயதுடைய தீபக் ராவ் என்பவர் ஓட்டுநர் என்பது தெரியவந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, பாலியல் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல் அல்லது ஒரு பெண்ணின் அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மற்றும் பிறரின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல் போன்ற பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.