கட்டிய கணவனை கட்டிலில் கட்டிவைத்து அடித்து துன்புறுத்தியும், லைட்டரால் மர்ம உறுப்பை சுட்டும் மனைவி கொடுமைப் படுத்திய பகீர் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் மன்னன் ஜைதி. அவர் அங்குள்ள போலீசில் தனது மனைவி தன்னை தாக்குவதாகக் கூறி புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரைக் கேட்டு போலீசார் சிரித்து வைக்க, மன்னன் ஜைதி ஆதாரமாக அளித்த வீடியோ காட்சியைப் பார்த்ததும் அரண்டு போயிருக்கிறார்கள்.
கணவனைக் கட்டிவைத்து சொல்லொணா துயரங்களை மனைவி அரங்கேற்றிய வீடியோ காட்சியைப் பார்த்த போலீசார் என்ன நடந்தது என்று விசாரிக்க, தான் பட்ட கொடூரங்களை சொல்லி இருக்கிறார் மன்னன் ஜைதி.
மன்னன் ஜைதியும், அதே பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹானும், காதலித்து பெற்றோர் சம்மதத்தின் பேரில் கடந்த ஆண்டு நம்பர் மாதம் 17ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர்.
திருமணத்துக்கு பின்னர் தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று மெஹர் ஜஹான், கணவரை நச்சரிக்க அதன்படியே காதல் தம்பதி தனியாக வீடுபிடித்து வசித்து வந்திருக்கிறார்கள்.
இந்த நேரத்தில்தான் மெஹர்ஜஹானின் மற்றொரு முகம் அம்பலமாகி உள்ளது. அது மெஹர் ஜஹானுக்கு மது அருந்துவது, போதைப்பாக்கு போடுவது, சிகரெட் புகைக்கும் பழக்கம் இருந்ததுதான்.
மதுபோதையில் மெஹர்ஜஹான் தனது கணவரை கண்டபடி டார்ச்சர் செய்திருக்கிறார். அத்துடன் அவருக்கு வேறு நபருடனும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தெரிந்து மன்னன் ஜைதி கண்டித்ததால், தினசரி கணவருடன் மெஹர்ஜஹான் சண்டையிட்டதோடு அடித்தும் உதைத்துள்ளார்.
இதனை வெளியில் சொன்னால், நீ தான் என்னை தாக்கினாய் என்று போலீசில் மாற்றிக் கூறி சிறையில் அடைத்துவிடுவேன் எனவும் மெஹர்ஜான் மிரட்டியிருக்கிறார்.
இதனால் தனக்கு விபரீதம் ஏதும் நிகழலாம் என்று எண்ணிய மன்னன் ஜைதி, மனைவியின் அடாவடியை அம்பலமாக்க திட்டமிட்டுள்ளார். இதையடுத்து வீட்டில் மனைவிக்கு தெரியாமல் படுக்கை அறையில் ரகசிய காமிராவை வைத்துள்ளார்.
இந்த நிலையில் ஏப்ரல் 29அம் தேதி இரவு கணவருக்கு போதைப் பாலை மெஹர் ஜஹான் கொடுக்க அவர் மயக்கமாகி உள்ளார்.
இதன்பின்னர் கணவனின் கை, கால்களை கட்டிலில் கட்டிப் போட்டிருக்கிறார்.
மன்னன் ஜைதிக்கு மயக்கம் தெளிந்த நிலையில், தான் கட்டிப் போடப்பட்டிருப்பதைப் பார்த்து பகீர் அடிக்க, அங்கே மனைவி மெஹர்ஜஹானோ குரூரமுகம் காட்டியபடி நின்றிருக்கிறார்.
கணவனின் வாயில் கருப்புத்துணியால் இழுத்துக் கட்டியவர், அவரின் வயிற்றில் அமர்ந்தபடி கழுத்தை நெறித்துள்ளார்.
கணவர் சப்தமிட்டும் காதில் வாங்காதவர், போதைப் போக்கு போட்டுக் கொண்டும் சிகரெட்டை புகைத்தபடியும் மன்னன் ஜைதியின் மர்ம உறுப்பில் சிகரெட்டால் சுட்டும், கத்தியால் காயப்படுத்தியும் உள்ளார்.
தனக்கு நேர்ந்த இந்த துயரங்களை அழுதபடியே மன்னன் ஜைதி போலீசில் கூறியதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த கொடூர மனைவியை கைது செய்துள்ளனர்.
மன்னன் ஜைதியும் தற்போது மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.
மது போதையாலும் தகாத உறவாலும் கணவனை கொடுமைப்படுத்திய அந்தப் பெண்ணின் வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
அவருக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.
கணவரை கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய மனைவி மெஹர் ஜஹான்