பாம்பு கடித்துள்ள இளைஞரின் உடலை ஓடும் கங்கை நீரில் உடலை வைத்தால் விஷம் நீங்கும் என்று கூறப்பட்டதால் அவரது உடலை 2 நாட்களாக குடும்பத்தினர் கங்கையில் மிதக்க வைத்திருந்த நிலையில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது இளைஞரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார்.
தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26 ஆம் தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிகளில் சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாக இருக்கிறார்.
இதையும் படிங்க: பற்றி எரியும் உ.பி :அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வலுக்கும் போராட்டம்!
இதனை கண்ட உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தால் இது சரி ஆகாது, கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்றஒரு சிலர் கூறியுள்ளனர். இதனை கேட்டுக்கொண்ட இளைஞரின் உறவினர்கள் மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு தினங்களுக்கு மோகித்தின் உடலை கங்கை நதியின் போட்டு வைத்துள்ளனர்.
ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அந்த இளைஞரை காப்பாற்றவில்லை. மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் நதியிலேயே போட்டு வைத்துள்ளனர்.தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.